Thursday 26 May 2016

ஆதித்தனிமையின் ஈரம்

ஆதித்தனிமையின் ஈரம்

-------------

மிருகக் காலடிச்சூட்டை
என் நாசி நிரப்பி
காடுதிண்ற மிச்சக்காற்றை பருகி
ஆதிக்கிழவியின் வெற்றுடம்பில் நீந்த
ஒரு மனித உடல் தேவையாய் இருக்கிறது

ஆதிமரநிழலில் விழுந்த தனிமையை கொறித்து
இருவாச்சிக்கூட்டின் இறகுப்பொதிக்குள் திணிக்க,
என்னுரு மாறி அலகு நீண்டு
முளைத்த கண்களில் காடு பறக்கிறது

ஸ்தூல தேகத்து மரமுடிகளை
ஆழவேரின் ஈரம்தொட்டு பின்னி
முகமுடியின் இருட்டுக்குள்
பதுங்கியிருக்கிற பிறையை
ஈரத்துணி எடுத்து அழிக்க
மாயையின் விரலில் மேகத்தடங்கள்

காரிருள் பொழுதின் காட்டில்
இருளின் வாசத்தை நுகர்கிற மதியில்
ஒரு புல்வெளி பூத்திருக்கிறது

மியாவ் மீசையில்
ஒட்டியிருக்கிற மாமிசவாடை
எலிக்குஞ்சுகளின் சுவையை
காற்றில் பரத்தவிட்டிருக்கிறது ...

- அதிரூபன்

ஆதித்தனிமையின் ஈரம்

ஆதித்தனிமையின் ஈரம்

-------------

மிருகக் காலடிச்சூட்டை
என் நாசி நிரப்பி
காடுதிண்ற மிச்சக்காற்றை பருகி
ஆதிக்கிழவியின் வெற்றுடம்பில் நீந்த
ஒரு மனித உடல் தேவையாய் இருக்கிறது

ஆதிமரநிழலில் விழுந்த தனிமையை கொறித்து
இருவாச்சிக்கூட்டின் இறகுப்பொதிக்குள் திணிக்க,
என்னுரு மாறி அலகு நீண்டு
முளைத்த கண்களில் காடு பறக்கிறது

ஸ்தூல தேகத்து மரமுடிகளை
ஆழவேரின் ஈரம்தொட்டு பின்னி
முகமுடியின் இருட்டுக்குள்
பதுங்கியிருக்கிற பிறையை
ஈரத்துணி எடுத்து அழிக்க
மாயையின் விரலில் மேகத்தடங்கள்

காரிருள் பொழுதின் காட்டில்
இருளின் வாசத்தை நுகர்கிற மதியில்
ஒரு புல்வெளி பூத்திருக்கிறது

மியாவ் மீசையில்
ஒட்டியிருக்கிற மாமிசவாடை
எலிக்குஞ்சுகளின் சுவையை
காற்றில் பரத்தவிட்டிருக்கிறது ...

- அதிரூபன்

ஈரவலியில் முளைத்த பூஞ்சைக்காளான்கள்

வலித்தடங்களின் ஈரம்

---------------------

முதிர்இலையின் மஞ்சள்முகம்
காட்டுநிழலின் தனிமையருந்தி
இரைப்பை நிரம்பி வழிகிற பசியால்
சல்லிவேரின் மார்பை பருகுகிறது

குழலூதி பசியருந்துகிற மூங்கில்காடு
பார்வையற்றவளின் உதடுகளால்
ஒலியின் ஊனத்தை வாசித்து
கானல்வெளியில் வெம்பிக்கொண்டிருக்கிறது

வலையோட்டையில் தப்பிவிடுகிற
மீன்குஞ்சுகள்
வற்றிய நதியில் மீன்களாகின

மழைநீரில் மூழ்கிய காகித மழலைகள்
பின்னொரு நாள்
கருகி சாம்பலாகின்றன
நீரின் தாகம் ஒரு வெயிலை பருகுகிறது

ஈரலின்சுவை உமிழ்கடலை பெருக்க,
செம்மறிக்கிடாவின் தோல்
மட்டைவேலியில் சொட்டிக்கொண்டிருக்கிறது

இரவில் உதிர்ந்த இரத்த வலியால்
விழித்திருக்கிற தனியொருத்தியின் கனவில்
உறக்கம் தற்கொலை செய்துகொண்டது ..

- அதிரூபன்

Monday 23 May 2016

ஒருகண மனக்காதல்

மனசுவிட்டு பேசுறதுக்கான கணத்த உன்னோட அருகாமை தான் கொடுத்துச்சு.
உயிருக்கும் உடம்புக்கும் இடைபட்ட தூரத்தில உன்னோட முகத்த நிரச்சுவச்சிடுக்கேன்.
எனக்கான ஒன்னு உன்னோட சிரிப்பில மறஞ்சே வாழ்றதுக்கான ரகசியத்த
ஒருதரயாது சொல்லிடு.
மனசு நெறஞ்சு வாழ்ற வாழ்க்கை சொர்க்கம்னு நீ சொன்ன வார்த்தைல தான்
என்னோட மனச தொலச்சிட்டேனு
என்னால நேர்படச் சொல்லமுடியல.
இன்னும் வார்த்தையாக்கப்படாத என்னோட உணர்வுக்குலாம் உன்னோட பெயர் தான் வச்சிடுக்கேன்.

எப்பவோ
அழும்போது பெய்யிறமழையில உன்னோட அன்பும் சேர்ந்தே விழுந்துச்சுன்னா எனக்கான உலகத்த உன்காலடில வரஞ்சுவச்சிடுட்டு செத்துப்போய்டனும்னு இப்பத்தோணுது மித்ரா.
இந்த அரூபமான காதல ரூபமா மாத்தக்கூடிய உன்னோட சம்மதம் இருக்கே, அது இந்த உலகத்துவிட பெரியது

பிரபஞ்சத்தோட அழிவுல இருந்து இன்னும் உயிர்ப்பா இருக்கிறது காதல் மட்டும்தான்னு நான் சொல்லைல
நீ தலையாட்டியது,
இப்பவும் எனக்கு முன்னால வீசுற காத்துல தெரியுது.
நீ பேசாத வார்த்தைல தான் என்னோட உயிர அடச்சுவச்சிருக்கேனு உணர்வுப்பூர்வமா சொல்றதுல அபத்தம் இல்லைனு நினைக்கிறேன்.
மனசுக்குள்ள வீசுற காத்துக்கு உன்மோகம் வந்திருக்குனு சட்டுனு என்னால சொல்லமுடியல.
உனக்குள்ள மூழ்கி கிடக்கிற என்னோட நினப்ப ஒருதர தொட்டுபார்த்த அப்படினா.,
நம்ம வாழ்க்கை அழகாகிடும்.

மித்ரா மித்ரா னு உன்பேருல இருக்கிற போதைய
எந்த ஆல்கஹால், நிக்கோடினோ கொடுக்காதுங்கிற மடத்தனத்த
காதல்னு  பிடிச்சு கொண்டாடுற நான்
பைத்தியக்காரனுக்கு மேலதான்

பொதுவா ஆணோ பெண்ணோ
காதலுல கெஞ்சவிட்டு கெடக்கிறதோட சுகவலிய
நானும் உணர்ந்திடுக்கேனு நினைக்கும்போது
கொஞ்சமா மனசு உன்கிட்ட கெஞ்சிறதுல தப்பில்ல தான் ..

காதல வெறும் கண்ணால மட்டும் காட்றதுல
என்ன நியாயம் இருக்குனு புரியல.

உயிர்வாழனும்னு விரும்புற உலகத்தோட பொதுபுத்தில இருந்து விழகி
உனக்காக சாகுறதுங்கிற அந்த கணத்த அழகுனு முழுசா என்னால நம்பமுடியல

உன் நிழலத் தொட்டுபாக்குற வாழ்க்கை
என்ன வாழவச்சிடும் மித்ரா

இந்த கடிதத்த உன்மனசு படிக்கும்ங்கிற நம்பிக்கைய
இந்த கணம் எனக்கு கொடுத்திருக்கு

கெஞ்சுறது மட்டுமே காதலுல அழகு இல்லடி ......

ப்ளீஸ்.....

--------------------

Saturday 21 May 2016

முதிர்சருகில் ஒட்டிக்கிடந்த நத்தையின் காமம்

முதிர்சருகில் ஒட்டிக்கிடந்த நத்தையின் காமம்

- - - - - - - - -

தவளையின் குரல்வளைக்குள்
வியர்த்துப் பெய்கிற மழை
பின்னிரவில்
கூடாரப்பொதிசுமந்த நத்தையின் தேகத்தில்
ஈரத்தை உலர்த்துகிறது

பிசுபிசுப்பணிந்த உடற்நாவால்
சைக்கிள் தடங்களை வரைந்து செல்கிற உயிர்
சுருளியோட்டின் மாகுகைக்குள்
ஐம்புலனின் தாகத்தை கொண்டடைக்கிறது

இருளடர்ந்த நத்தை விழிகளுக்குள்
ஜஸ் ஈரத்தின் உரு ஊறுவது
மழைபோர்த்திய மணல்துகளென நெழிகிறது

இனம்தேடி கொம்பு நீட்டும்
பெருஉடலின் ஜவ்வுக்காமம்
ஒரு முதிர்சருகின் ஓசையில் ஒட்டிக்கிடக்கிறது

மழைமழையென வேண்டிதிரிந்த
இரவுநேரத்துக் கம்பளிக்குள்
ஒரு நத்தைக்குடும்பம்
காமம் உண்பது
மழைநீர் உறைநீராகும் காலம்வரை நீடிக்கும் ...

- அதிரூபன்