Wednesday, 23 September 2015

கவிதை எனப்படுவதும் - அதன் அழகியலும்

அகத்தேடல்கள் கவிதையாகவே இருக்க வேண்டும்.
நல்ல கலையாகவும் இருக்கவேண்டும்.

------------------

வாழ்வின் மீதத்தை கவிதைகளே கொண்டாட வேண்டுகிறேன்.

கவிதை என்பது
பிரபஞ்சத்தின் அறியாமையை கூறி,
அதன் இயல்புநிலைக்குள் மொழியை மண்டியிட்டுக்கிடக்கவைத்தலே ஆகும் .

எல்லா சாமாணியனாலும் கொண்டாடக்கூடிய ஒரு கவிதை
முதலில் மொழியை தீர்மானிக்கிறது
எளிதாக புரிதல்கொள்ளக்கூடிய ஒரு கவிமொழி
ரசனையின் மீதேறியே பயணிக்கிறது

வீரியம் புகுத்திய கவிதையொன்றில்
மிக எளிதாக நாம் உட்புகும்பொது
ஏதாவதொரு கணத்தின் நொடியில்
கவிதையானது நம்மை மெல்ல தடுமாறவைக்கிறது.
கவிதையின் இருப்புநிலையிலிருந்து
பெரும்பாலும் நாம் சிந்திப்பதே கிடையாது.
சில நேரத்தில் கவிஞர்களும் கவிதையை தொலைதூரத்தில் வைத்தே பொருளை முடிவுசெய்கின்றனர்.

கவிதையின் ஆதிப்பொருளை
நாம் எந்த கோணத்தில் வைத்துப்பார்த்தாலும்
அது நாம் பயன்படுத்திய கண்ணாடியாகவே தெரியும்.
மாறாக, ஒரு புதுவடிவத்தில் வடித்த புதுமொழிக்கவிதையொன்றை
நவீனத்திலும் புதுமையிலும் எழுதி
ஒரு பொருள் ஒரு காட்சி புகுத்துகிற இரு கவிதைகளை படிக்கும்போது
நம் அகத்தின் தெளிவு உச்சரிப்புகளால் வியந்துபோகும் .
மற்றும், மொழியின் திறனையும் கவிதையின் பொருளையும் நன்கு அறிந்துகொண்டு பயன்பெறமுடியும் .

வாசகன் எதிர்பார்க்கிற கவிதையானது
ஒரு மழலையின் சிரிப்பில் உதிர்கிற பூக்களாகவே இருக்கவேண்டும் கவிதை.
அது அழகின் சாயலை வெளிக்கொணரவும்
ஆச்சர்யத்தின் சூழலை உருவாக்கவுமே
இத்தகைய கவிதைகள் அமையும்.

நவீனக்கவிதையானது
முதலில் வார்த்தைஜாலம் செய்கிறது
வாசிப்பு நுனுக்கங்களில் மிக அழகிய சொல்லாடலை புகுத்துகிறது.
மொழியின் மேன்மையிலையே பயணிக்கிறது.
புரிதலுக்கு பிந்தைய நிலையிலையே சிலநேரம் மிளிர்கிறது.
எல்லா அகச்சாயலின் வார்த்தைகளையும்
இந்தவகைக்கவிதையே எழுதவைக்கிறது.

பழமையை, நவீன சொல்லாடலில் எழுதி
கவியின் நயத்திற்கு புதுமைசேர்த்து
கவிதையின் முழுமையிலும் ஒரு உயிரோட்டத்தை படரச்செய்து
எல்லா கவிமொழியின் மேன்மையிலும்
எழுதிமுடித்த ஒரு கவிதை
ஐம்பதுவயது இளைஞனாகவே காட்சிதரும்.
அப்படியொரு கவிதையை சமீபத்திய கவிமொழியில்
நவீனத்தில் எதிர்பார்க்கலாம்.

ஒரு கவிதையின் பொருட்டு
நல்ல மனநிலையை தரவேண்டும்.
மேலும், அதன் மேலொரு பிரியத்தை படரச்செய்துவிடவேண்டும்.
அதிகபட்சமாக, இத்தகைய கவிதையை எழுதுகிற கவிஞர்கள் மீது
ஒரு தீராக்காதலை ஏற்படுத்தவேண்டும்.

நானும் சமீபத்திய நாட்களில் இருந்து
கவிஞர்கள்மீது காதல் வயப்பட்டிருக்கிறேன்.
உணர்வுக்கு வடிவம்கொடுக்க கூடியவர்கள்
கவிஞர்கள் மட்டுமே.

சில கவிதையிலிருந்து மீளவே முடியாதநிலை
அன்பின் பிணைப்புசங்கிலியொன்றால் நம்மை முடக்கிப்போட்டுவிடிகிறது.

கவிஞர்கள் அவர்களுக்கான பாதையிலிருந்து
மாறாக பயணிக்கவேண்டுமென நினைக்கிறேன்.

காட்சிகளையும் சூழலையும் கற்பனையையும் கவிதையாக்கி, அதன் வலியை மகிழ்வை கொண்டாடுகிற கணம் போய்,
உணர்ச்சிகளின் வெளிப்பாட்டில் ததும்புகிற நிமிடகணத்தை கவிதையாக்க வேண்டுமென நினைக்கிறேன்.

ஒரு இரவின் கவிதையை
விடியவிடிய விழித்திருந்து எழுதுகிறமாதிரி அமையவேண்டும்.
இந்த விழித்தல் மகிழ்வை தர வேண்டும்.
இந்த விழித்தல் நல்ல கவிதையை தரவேண்டும்.

கவிதை எழுதுபவர்கள்
எழுதவதோடு மட்டுமில்லாமல்,
கவிதையை கொண்டாடுபவர்களாக இருக்கவேண்டும்.
கவிதையின் மீதேறி எப்போதுமே அமர்ந்து கொண்டிருக்கவேண்டும்.
கவிதைக்கூந்தலில் மலராக மணக்கவேண்டும்.

- ச.விவேக்

Friday, 18 September 2015

இது அனாமிகாவின் அறை

@ அனாமிகாவின் அறை @

காலத்தின் நுட்ப வெள்ளத்தில்
ஒரு ஞாயிறின் அந்தி மாலையில்
பேரூரின் கவிதைவீதிக்குள் அடித்துச்செல்லப்பட்டு
ஒரு கவிதையின் வீடுபுகுந்து
கவிதையும் நிசப்த்தமும் நிறைந்த அறையை
சின்னச்சத்தம் கிழிய கிழிய மெல்லத்திறக்கிறேன்

காகிதங்கள் நிறைந்த படுக்கையும்
படுக்கையில் நிறைந்த காகிதமும்
அவ்வறையின் மௌனகீதமும்
நிசப்த்த பெருமூச்சின் துண்டிக்கப்பட்ட ஒலியும்
என் அலங்கரிக்கப்பட்ட கவிதை மூளையில்
ரசனை நரம்புகளை படரச்செய்கின்றன

ஒரு டைரியின் பத்தாண்டு நறுமணத்தை
சுவாசவங்கியின் சேமிப்பு கிடங்கில் தள்ளி
அவ்வப்போது தடவித்தடவி மணம்கொள்ளுல்
கவிதைகள் மொய்க்கும் என் இருதயத்தை
பத்தாண்டிற்கான புதிய பழையவாடையொன்றை
அறையின் சரிந்து கிடந்த டைரியொன்றில்
நுகர்கிறேன்

ஞாலத்தின் பிரம்பிப்புகளை
இந்த அறையே எனக்கு உணர்த்துகிறது

இரண்டாயிரத்தின் வார்த்தைகள் நிறைந்த
ஒரு பழைய டைரியின கடைசி பக்கத்தில்
நேற்றைய இரவின் கடைசியில் எழுதிய
யோனியின் கவிதை

அனாமிகாவின்அறையின் வாசமும்
கவிதைக்கிடங்குகளில் மொய்த்த வார்த்தைகளும்
என் சதை நரம்பு கிழியகிழிய
என் எல்லா துவாரத்தின் வழியும்
எனக்குள்ளே நுழைந்து குடைந்து
ஒரு மாய உணர்வை பிரசவிக்கிறது

ஆயிரம் கவிதைகளும்
ஆயிரம் தலையில்லா பிண்ட கதையும்
ஆயிரம் பிணத்தின் குருதிவாசமும்
ஒரேயொரு அனாமிகாவும்
அதன்பிறகு
ஒரேயொரு ரூபனாகிய நானும்
ஒரு கலையை உண்டு வாழ்வதற்கு
இந்த அறையே போதுமானதாகிறது ...

- ச.விவேக்.

Thursday, 17 September 2015

சக்திஜோதியின் சொல் எனும் தானியம் நூல் குறித்து

   ' சொல் எனும் தானியம் '

ஒரு கவிதை, அதன் நிலையிலிருந்து அழகை வர்ணனையை, சூழ்நிலையை, உணர்த்துதலை நமக்கு கற்பிக்கும்போதுதான் நமக்கான ஓர்தனித்த மனநிலையில் அது அமர்கிறது அல்லது அப்பிக்கொள்கிறது .

அப்படித்தான், சொல் எனும் தானியம் என்னுள் நூற்றுக்கணக்கான விதைகளை முளைத்தருள விட்டிருக்கிறது .

பிரபஞ்சத்தின் முக்கிய அம்சத்தில் கலையெனும் பிரமிப்பு, நம்மை ஆட்கொள்கிறது .
ஏதாவதொரு கலையின் உடம்பில் ஒரு செல்லாக நாம் உட்புகும்போதுதான் நமக்கான ஞாலத்தை நாம் உரசி உரசி செல்வதை உணரமுடியும் .

கவிதை எனும் தீவிரவாதத்தால்
என்னை கொன்றுவிடுங்கள்
என்னை காப்பாற்றுங்கள் என்று எவராது தன் முணங்களை முன் வைக்கும்போதுதான்
கவிதை நம்மலை அரவணைக்கிறது, நம் சுயத்தை குளிப்பாட்டுகிறது .

இப்படியொரு தீவிரவாத்ததால் தான், சில நாட்களுக்கு முன் நான் கொலைசெய்யப்பட்டேன். மீண்டும் கவிதையை வாய்பொழியவே ஜனனித்திருக்கிறேன் .

என்னை கொலைசெய்த தீவிரவாதம் " சொல் எனும் தானியத்தில் "  எழுத்துரு வடிவில் துப்பாக்கியாய் அல்லது துப்பாக்கி வடிவில் எழுத்துருவாய் எனக்குள்ளான ரசணை பிரபஞ்சத்தில், பிரளயம் நடத்திவிட்டு சற்று ஓய்வெடுக்கிறது .

" சக்தி ஜோதி" என்கிற பாத்தோட்டத்திலிருந்து, சில பூக்களை வாய்வழி ரசணைநரம்பிற்கு செருகிப்பார்த்தபொழுது,
என் உடம்பின் அனைத்து நரம்பிலும் , குருதி ருசிக்க வந்த கவிதையாகவே அதன் வாசத்தை பரப்பி விட்டது .

"" வகுப்பறையில் நண்பன் ஒருவன்
மூங்கில் கழியினால் அடிவாங்கிக்கொண்டிருக்கையில்,
அதே செயலுக்காக தப்பித்துக்கொண்டிருந்தேன் .

  - இந்த உண்மை, ஆறுவருடங்களுக்குப்பிறகு எனக்கு எப்பொழுது நியாபகம் வருகிறதென்றால்,
சொல் எனும் தானியத்தில் முதல் கவிதையான சூரியனை நேர்ந்து கொண்டிருப்பவளை தரிசிக்கும்போதுதான் .

" அவன் விதைப்பது
பெயர்தெரியாத சின்னஞ்சிறு
பறவைகளுக்கும்தான் "

  - என்கிற வரி, ஓர் உணர்தலை எனக்குள் உணர்த்திவிடுகிறது .

சக்தி ஜோதி என்கிற கவி விதைத்தது,
கண்டுபிடிக்க இயலாத நம் உடம்பின் ஏதாவதொரு ரசணை நரம்பு பருகத்தான்.

கவிதையின் ஸ்பரிசத்தில் நாம் அமர்ந்துகொண்ட போது,
ஒரு இரவை, ஒரு பௌர்ணமியை, ஒரு காதலை அல்லது ஒரு காமத்தை நாம் முதல்முதலாக எழுதி நனைந்திருப்போம் .

இக்கவிதை தொகுப்பின் ஸ்பரிசக்கூந்தலில், பேன்களெல்லாம் வண்ணத்துப்பூச்சியாய் போகிற மாயம் தான்,
இக்கவிதைகளை எழுதிய கணத்தை தீர்மானிக்கிறது.

ஒரு இருள் சாதாரணமாக
ஒரு இடத்தை அடைவதில்லை.
இடம் அறிந்து இடை புகுந்து நெழிந்து வளைந்து நேர்கோட்டில் செல்கிற இருளை, எப்படி காட்சிப்படுத்துவது என்கிற உண்மையை ஒரு உவமையாக்கி தெளித்திருக்கிறது, மழை மறைவு நிலத்தில் ஓர்வரி .

அது,

" தோப்புத்துரவென செழித்து இருக்கும்
மலையடிச்சரிவில் இருக்கிற கிராமத்தில்
கூடடைந்த பறவைகளின்
சிறகசைவுக்குள் இருள் புரள்கையில் "

இப்படியொரு காட்சிப்படுத்துதல் தான்
கவிதையை, அதன் உயிரை மிக எளிதில் அடையாளம் காண வைக்கிறது.

" ஓவியத்தினுள் புல்வெளி"
" துயரத்தை பொசுக்கும் எரிநட்சத்திரம்"
" நிலவு விலையாட்டின் சுழற்சி"
" அமிழ்தலும் மிதத்தலும அற்ற ஆறு "
" மழை மறைவு நிலம்"
" முந்தானைச் சோளம்"

- இக்கவிதைகளும் இதற்கான கணமும் களமும் எனக்கான உயிரை பூப்பெய்துவிட செய்கின்றன. மற்ற கவிதைகளின் பொழிவுமொழி, என் ஜனனத்தை மீண்டும் ஒருமுறை ஜனனிக்க வைக்கிறது.

முந்தானைச்சோளமெனும் சாமானிய சாதாரண பெண்களுக்கான ஓர் கவிதை,
அவ்வினத்தின் காதலை சொகுசாக நிலைநிறுத்துகிறது.

" பகலெல்லாம் கசிந்து மீந்திருக்கும் பாலை சிசுவிற்க்கும்
இரவை கணவனுக்குமாகக் காட்டி
விளைநிலமாக்கிக் கொண்ட
பெண்ணின் மார்பகத்திலிருந்து
காதல் பெருகி வடிந்துகொண்டிருக்கிறது "

- இக்கவிதையின் கருவிலிருந்து என் ஜென்மத்திற்கான நீர் ஆனந்தத்தில் இதயம் கிழித்து வடிகிறது காகிதமெங்கும் .

ஒரு புத்தகத்தை முழுமைபடுத்துதல் என்பது,
அதன் கருவில் நாம் சிசுவாக முளைத்து மார் பருகும் போது தான்.
இப்புத்தகத்தின் முழுமையை என் தனித்த அறையின், குளிர் வெளிச்சத்தில் இரவு 2.30 மணியின் போதுதான்.
அவ்விரவிலே நான் சிசுவாகி விட்டேன், இந்நிகழ்வின் மகிழ்வில் மார் பருகி விட்டேன்.

மொழி இடறிய கணத்திலிருந்து
தோன்றுகின்ற எழுத்து பிம்பத்தின் சக்திதான்  ஒரு கவிதையை அதன் வெற்றியை நிலை நிறுத்துகிறது.

சமூகம் தூங்கிக் கொண்டிருக்கும் நாளில்,
பெண்ணியம் இடிவாங்கிக்கொண்டிருக்கும் நாகரிகத்தில்,
கருவறைக்குள் கொலைசெய்து கொண்டிருக்கும் இவ்வுலகில்,
ஒருபெண் தன் வீரியத்தை மொழியின் துணையால் கவியின் பேரானந்தத்தால் இப்பிரபஞ்சத்தை தட்டி தட்டி உசுப்புவதென்பது ஆச்சர்யமாகவே இருக்கிறது.

" பசித்த ஆட்டுக்குட்டியின் மிரண்ட கண்களைப்போலவே "
  - இக்கவிதை உலகில், கவி சமைத்து உண்ணும் என் ஐம்புலனிற்கு , சக்திஜோதி என்கிற நிஜம், என்போன்றோரை மிரட்டிப்போகவே இக்கவிதைகளால் எங்களுக்கு பசி தந்திருக்கிறார்.

" முதல் முதலாக பெற்றுக்கொண்ட முத்தம் "
" முதல் முதலாக எழுதிப்பார்த்த கவிதை "
" முதல்முதலாக பிடித்துப்போன ஆசிரியை "
" முதல் முதலாக பிரசவவலி பொருத்த தாய்மை "

- இவையாவுமே நம் ஜென்மத்தின் மூச்சுக்குள், மறவாது இருந்து மகிழ்வு தரக்கூடிய விசயம்.
இதன் நுனியிலிருந்து நீண்டுகொண்டிருக்கிறது சொல் எனும் தானியத்திற்கான என் பிரியம்.

" பாம்பின் விஷம் போல
காமம் தாங்கியே
கோடையின் பூக்கள் மலர்கின்றன "

- இக்கவிதையின் மெய்பித்தல், கோடைபூக்களின் மொட்டவிழ்த்தலை, அதன் தேகப் பிளவுகளை, விஷம விருட்சத்தை மிக நாசூக்காக உணர்த்திவிட்டு மனதில் ஜில் என சூடிக்கொள்கின்றன கோடைப்பூக்கள்.

ஒரு ஜென்ம காலத்தை கவிதைகளுக்குள் முக்கி, நனைந்த ஈரம் கொஞ்சம் கொஞ்சமாக காற்றில் கலந்துபோகும் சமயத்தில்தான், கவிதைகளுக்கான சுவாரசியம் மட்டும் நீர்நிலையற்ற மனதில் ஒரு ஊஞ்சல் கட்டி ஆடித்திரியும்.

கவிதைகளுக்கான உடம்பை ஆடையை தயார்படுத்திக்கொண்டு, அக்கவிதையின் உயிரை எங்கேயாவது தேடுபொருளாக்கி வினவிக்கொண்டிருக்கும் கலை கட்டத்தில்,   உடம்பையும் ஆடையையும் தவிர்த்து, வரிகள் முழுக்க உயிரை வடியவிட்ட சொல் நிர்வாணத்தின் அழகு , எல்லா சாமணியனாலும் கொண்டாடக்கூடிய ஒன்றாக இருக்கிறது. இதை சக்தி ஜோதியின் கவிதைகளில் பல இடங்களில் பார்க்கலாம்.

பெண் ஒருத்தி சாதாரண நாளிற்காக திணிக்கப்பட்ட மனநிலையை எப்போதும் உடுத்திக்கொண்டிருக்கிறாள்.
அவள் தாய்மை வலி உணருகிறாள், உழைக்கிறாள், நாற்று நடுகிறாள் , பிரபஞ்சத்தை  உருவாக்க தன் கடமை உடமைகளை வெளிக்காட்டுகிறாள். இந்நாடு பெண்களால் நிறைந்திருக்கிறது. அதனால் தான் என்னவோ பெண்ணியம் இடி வாங்கிக்கொண்டிருக்கிறது. பெண்கள் பெற்றிட்ட செல்வத்தைதான் யாவரும் கொண்டாடுகிறோம். பெண்கள் உருவாக்கிய வீட்டின் அறையில் ஆண்களின் குறட்டை ஒலி நிறைந்திருக்கிறது. பெண் உறங்குவதற்கான வசதியை அமைத்து தருகிறாள். ஆனால், அவள் உறங்க மட்டும் நாம் அனுமதிப்பதில்லை. பெண்களின் உறக்கம் பல தவிப்புகளை மறைப்பதற்காகவே.

உண்மையில் பெண் ஒரு  நீள் உறக்கத்தையே விரும்புகிறாள். சவம் போலொரு யுகாந்திர உறக்கத்தையே விரும்புகிறாள்.
- இந்த மாதிரியான உறக்கத்தின் பின்னணியில் தான் அவளின் ஜென்மம், காலம், அழகு, ஆசை, கொண்டாட்டம், சுவாசம் அனைத்துமே நிறைந்திருக்கிறது.

எல்லா இரவின் உறக்கத்தைப்போலவே இந்த உறக்கம் இருந்துவிடாது. ஏனெனில், அவள் கேட்டது சவம் போலொரு யுகாந்திர உறக்கம். இந்த உறக்கத்தில் அவள் வேண்டுவது யாவரும் அறியாத்தாய் போகிறது.

சக்திஜோதி எழுதியிருக்கிற இந்த யுகாந்திர உறக்கத்தில், அதன் மென் முடிச்சுக்களை அவிழ்த்து பார்த்தால், சிலநூறுஆயிரம் பெண்களின் தவிப்புகள் உறங்கிக்கொண்டிருக்கும் என
நினைக்கிறேன்.

யுகாந்திர உறக்கத்தை கொண்டாடக்கூடிய ஒரு இரவும், இக்கவிதைக்காரியை கொண்டாடக்கூடிய ஒரு பகலும் எப்போதும் நிலைத்திடவே வேண்டுது இந்த கவிமனசு.

அழகியலின் மொழியை பிளந்து நவீன காலத்து இயல்பையும் சொல்லாடலையும் கவிதையெனும் அதிரூபமான வடிவத்திற்குள் நுழைத்து, இக்காலத்தின் சமவெளிப்பரப்புகளில் ஒழிந்தும் மறைந்தும் வாழ்ந்துகொண்டிருக்கக்கூடிய புரிதலற்ற அழகை , அம்சத்தை, தத்ரூபத்தை உணர்ந்து, கவியின் நயத்திற்கு பொன்னாடை அணிவிக்கிற சக்திஜோதி என்கிற பெண்மீனுக்கு ஒரு விண்மீனைத்தான் பரிசளிக்க வேண்டும்.

இக்கவிதை நூலுக்கு
தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள், அன்பின் அனற்பனியொன்றை மிகச்சிறப்பாக அணிந்துரை ஆக்கியிருக்கிறார்.

கவிதையும்
கவிதையின் பிம்பமும்
கணப்பொழுதில் தோன்றி
யுகக்காலம் வரை நீடிக்கிறதென்பதற்கு
- சொல் எனும் தானியம் ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு.

மொத்ததில் ,
சொல் எனும் தானியம்
  ஒரு நல்ல கலைஞர்களுக்கான தீனி
ஒரு நல்ல கவிஞர்களுக்கான பசி..