நட்சத்திரங்களின் நிழலொன்றில்
உயிர் விலகி ஓடுவதென்பது அகாலத்தின் நீட்சியில்
காலம் வரையறுக்கிற இயற்கையின் இயல்புநிலை என
நம்பமறுக்கிற அறியாமை இல்லாத
ஏதோ ஒரு எளிய மனகணம் தான், கொலை தற்கொலை யென
விபரீத பிறமன உளைச்சலை தன்உடல்வருத்தி,
உயிர் பறத்தலுக்கு முந்தைய கணத்தில் தீர்மானிக்கிறது
தனிமனிதனால் மிக தைரியமாக அல்லது மிகமிக கோழைத்தனமாக முடிவெடுப்பது தற்கொலையென்பதை தாண்டி,
தன்மரணம் காலத்தின் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்படாது
தன் சுயம்தவிர்த்து இனம் சார்ந்து பேசப்படவேண்டும் என்கிற கடைசிய மனோபாவம்
எந்த நிலையை எந்த ஆறுதலை அந்த வெற்றுடம்பிற்குள் ஏற்பட்டிருக்க வேண்டும்.
உயிருக்குள் நடுங்கிக்கொண்டிருந்த உங்களது கடைசி எழுத்துக்களின் முன், என் ஈரமனதை வைத்துவிடுகிறேன் ரோஹித்.
எழுத்தாளனாக வேண்டுகிற உங்களது மனம் , அது அனுபவித்த கடைசிய நொடி, நீங்கள் ரணப்பட்ட அந்த இருதய மனவலி, கடைசியாக முடிவுசெய்த உங்கள் மரணம் ....
அந்த ஞாயிறு பிழிந்த உங்கள் மனதின் ஞானம், இந்த என்தனிமையில் மேய்ந்துகொண்டிருக்கிறது ரோஹித்.
நீங்கள் சொன்னதுபோல, காயப்படாமல் அன்பு பெறுவது கஷ்டமான ஒன்றுதான்..
நான் அன்பு வைத்திருக்கிறேன். உங்கள் காயத்தின் மீதும்.
உங்கள் மரணத்தின் மீதும்.
உங்கள் மீதும்....
ரோஹித் .. ரோஹித் .. ரோஹித் ..
No comments:
Post a Comment