@ அனாமிகாவின் அறை @
காலத்தின் நுட்ப வெள்ளத்தில்
ஒரு ஞாயிறின் அந்தி மாலையில்
பேரூரின் கவிதைவீதிக்குள் அடித்துச்செல்லப்பட்டு
ஒரு கவிதையின் வீடுபுகுந்து
கவிதையும் நிசப்த்தமும் நிறைந்த அறையை
சின்னச்சத்தம் கிழிய கிழிய மெல்லத்திறக்கிறேன்
காகிதங்கள் நிறைந்த படுக்கையும்
படுக்கையில் நிறைந்த காகிதமும்
அவ்வறையின் மௌனகீதமும்
நிசப்த்த பெருமூச்சின் துண்டிக்கப்பட்ட ஒலியும்
என் அலங்கரிக்கப்பட்ட கவிதை மூளையில்
ரசனை நரம்புகளை படரச்செய்கின்றன
ஒரு டைரியின் பத்தாண்டு நறுமணத்தை
சுவாசவங்கியின் சேமிப்பு கிடங்கில் தள்ளி
அவ்வப்போது தடவித்தடவி மணம்கொள்ளுல்
கவிதைகள் மொய்க்கும் என் இருதயத்தை
பத்தாண்டிற்கான புதிய பழையவாடையொன்றை
அறையின் சரிந்து கிடந்த டைரியொன்றில்
நுகர்கிறேன்
ஞாலத்தின் பிரம்பிப்புகளை
இந்த அறையே எனக்கு உணர்த்துகிறது
இரண்டாயிரத்தின் வார்த்தைகள் நிறைந்த
ஒரு பழைய டைரியின கடைசி பக்கத்தில்
நேற்றைய இரவின் கடைசியில் எழுதிய
யோனியின் கவிதை
அனாமிகாவின்அறையின் வாசமும்
கவிதைக்கிடங்குகளில் மொய்த்த வார்த்தைகளும்
என் சதை நரம்பு கிழியகிழிய
என் எல்லா துவாரத்தின் வழியும்
எனக்குள்ளே நுழைந்து குடைந்து
ஒரு மாய உணர்வை பிரசவிக்கிறது
ஆயிரம் கவிதைகளும்
ஆயிரம் தலையில்லா பிண்ட கதையும்
ஆயிரம் பிணத்தின் குருதிவாசமும்
ஒரேயொரு அனாமிகாவும்
அதன்பிறகு
ஒரேயொரு ரூபனாகிய நானும்
ஒரு கலையை உண்டு வாழ்வதற்கு
இந்த அறையே போதுமானதாகிறது ...
- ச.விவேக்.
No comments:
Post a Comment