Wednesday 27 January 2016

சின்னச்சின்ன ஜீவிதம்

குட்டி ஜீவிதம்

---------------------

பிறந்து ஆறுமாதமே ஆன
ஒரு குட்டி ஜீவனின் அமர்வை
கையிலேந்துகிறேன்

உடல் குழுங்கி விழிக்கிற சிரிப்பின் பிரதியை
இரு பிஞ்ஞுதடுகள் எனக்கு வழங்குகிற அம்சம்
எந்த உயிரின் பூரணச்சாயலையும் ஒத்திராது
பெருமழையின் முதல்துளியுடையை அணிந்திருக்கிறது

வாய்நிறையப் புன்னகையையும்
கண்நிறைந்தத் தூக்கத்தையும்
ஒரே கணத்தில் காட்ச்சிக்கிற சின்னமுகம்
ஒரு மகிழ்வின் கனவில் யாரிடமிருந்தோ
கிச்சுகிச்சு வாங்கியபடி வாய்பிளந்துகிடக்கிறது

இந்தப் பிஞ்சுவிரல்கள் தான்
ஒரு அழுகையின் போது,
நெற்றிவரை நீண்டுகிடக்கிற தோகைக்கொத்தை
பிய்த்திலுக்க முற்படுகிற கஷ்டத்தை
சப்பிசப்பி பசிஆற இருக்கிற முன்பான கணத்தில்
நிகழ்த்திக்காட்டுகிற சாமர்த்தியம்
ஒரு பறவையின் இறகுதிற்தலை நினைவுபடுத்துகிறது

என் சிரிப்பிற்கு எதிரே
இரு கைகளை நீட்டி
ஏந்தச்சொல்கிற
இந்தச் சின்னமனிதத்தின் ஆசையில்தான்,
என் பட்டாம்பூச்சிகளை பறக்கவிட்டிருக்கிறேன்

- அதிரூபன்

No comments:

Post a Comment